டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவும் அபாயம்

தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெங்குவைப் பரப்பும் அதே நுளம்புகள் மூலமே சிக்குன்குனியா பரவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டில் இலங்கையில் 17,816 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் நாட்டில் 5,175 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான மாதமாக இது பதிவாகியுள்ளது.
சிக்கன்குனியாவினதும் முதன்மை அறிகுறி காய்ச்சலே என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
40 Views
Comments