வெலிகம தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபுல் குமாரவை கைது செய்ய உத்தரவு

வெலிகம தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபுல் குமாரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை பதில் நீதவான் அறிவித்துள்ளார்.
மாத்தறை பெலன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகளுக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆட் கொலைக்கு திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு கடந்த வௌ்ளிக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மாத்திரமல்லாது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 8 பேருக்கு கடந்த வௌ்ளிக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
39 Views
Comments