ஆசிய இளையோர் குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்ற வவுனியா வீராங்கனைகள்

ஆசிய இளையோர் குத்துச்சண்டை கோதாவில் வவுனியாவைச் சேர்ந்த கஜிந்தினி லிங்கநாதன், கீர்த்தனா உதயகுமார் ஆகிய வீராங்கனைகள் வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
22 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஆசிய இளையோர் குத்துச்சண்டை கோதா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
இதற்காக நடத்தப்பட்ட பகிரங்க குலுக்கலில் வவுனியா வீராங்கனைகள் இருவர் உட்பட இலங்கை வீர, வீராங்கனைக் சிலர் நேரடியாக அரைஇறுதி மற்றும் இறுதிக் கோதாக்களுக்கு தகுதிபெற்றனர்.
மகளிர் பிரிவில் நேற்று(18) நடைபெற்ற 60 கிலோ கிராம் எடைக்குட்பட்ட அரைஇறுதிக் கோதாவில் கீர்த்தனா உதயகுமார் வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரைஇறுதிக் கோதாவில் கஜிந்தினி லிங்கநாதனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.
இந்த 2 வீராங்கனைகளுக்கும் முடியப்பு நிக்ஸன் ரூபராஜ் பயிற்றுநராக செயற்படுகிறார்.
ஆசிய இளையோர் குத்துச்சண்டை கோதாவில் இலங்கை மொத்தமாக 11 வெண்கலப்பதக்கங்களை அடைந்துள்ளது.
அரைஇறுதி மற்றும் இறுதி கோதாக்களுக்கு மேலும் சில இலங்கை வீர, வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளதால் வௌ்ளி, தங்கப்பதக்களை வெற்றிகொள்ளும் வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.
8 Views
Comments