ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் - ருவன் விஜேவர்தன

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்லமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று(24) ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட அழைப்பு விடுக்கப்படுவதாக ருவன் விஜேவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
121 Views
Comments