இன்று(01) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
01

இன்று(01) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று(01) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று(01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதனடிப்படையில், 

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 4,115 ரூபாவாகும்.

 

5 கிலோகிராம்  சிலிண்டரின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 1,652 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

 

2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

views

25 Views

Comments

arrow-up