டிப்பர் - உழவு இயந்திரம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை - தியாவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தியாவட்டுவான் பகுதியில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தை டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது குறித்த வீதியூடாக பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் டிப்பரில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
7 Views
Comments