தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
18

தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதுள்ள EPF மற்றும் ETF கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

 

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரி ஒருவர் இதனை நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார்.

 

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நிலுவைக் கட்டணமாகவுள்ள 500 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

 

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் வகையில், பெருந்தோட்ட யாக்க மறுசீரமைப்பும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

 

இதனிடையே, அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு செலுத்தப்படாதுள்ள  EPF மற்றும் ETF கொடுப்பனவுகள் தொடர்பில் ஊழியர்களால் சுமார் 2000-இற்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாளாந்த தேசியப் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

views

9 Views

Comments

arrow-up