கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான உறவுப்பாலமாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா போற்றப்படுகின்றது.
69 Views
Comments