புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
21

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்காக 9 மணியளவில் வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

 

காலை 10 மணிக்கு புதிய அமர்வு ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றும்(20) முன்னெடுக்கப்படுகின்றது.

 

கை விரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை கட்டாயமானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

 

இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

views

100 Views

Comments

arrow-up