உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
21

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் 10ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.

 

உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சின் அனுமதி பெற்ற எந்தவொரு இறக்குமதியாளருக்கும் உப்பு இறக்குமதி செய்வதற்கு முடியும் என உபுல்மலீ பிரேமதிலக்க கூறினார்.

 

அத்துடன் அயடீன் கலக்காத மற்றும் அயடீன் கலந்த உப்பை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெட்ரிக் தொன் மேசை உப்பு இன்று(20) நாட்டிற்கு  கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

 

இன்று 10 உப்பு கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

views

6 Views

Comments

arrow-up