மித்தெனிய முக்கொலை - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
05

மித்தெனிய முக்கொலை - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலை - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளே துப்பாக்கிதாரிக்கு T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 12 தோட்டாக்களையும் வழங்கியுள்ளரென விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு உதவிய மற்றும் திட்டமிட்ட குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன் அவர் வீரக்கெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமை புரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய முக்கொலை தொடர்பில் இதுவரை 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

views

61 Views

Comments

arrow-up