புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் - IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.
இதுவரை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள வெற்றியின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட நாட்டின் 17.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச வர்த்தகக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே கொள்கையளவிலான இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
கடன் வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் தொடர்பில் நாட்டின் புதிய நிர்வாகத்துடன் கலந்துரையாட தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
125 Views
Comments