ஜெய்ப்பூரில் 11 இளைஞர்கள் செல்ஃபி எடுக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்
Latest_News
calendar
JUL
12

ஜெய்ப்பூரில் 11 இளைஞர்கள் செல்ஃபி எடுக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்

ஜெய்ப்பூரில் 11 இளைஞர்கள் செல்ஃபி எடுக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்

வட இந்தியாவின் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, மழை பெய்துகொண்டிருந்த போது  'அமர்' கோட்டை கோபுரத்தில் ஏறி குழு ஒன்று செல்ஃபி எடுக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் உடனிருந்ததாகவும், பீதியடைந்த ஒரு குழு மேலிருந்து குதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.500,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

source:hirunews

views

64 Views

Comments

subscribe
arrow-up