கொரோனா டெல்டா பிளஸ் வைரஸால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
24

கொரோனா டெல்டா பிளஸ் வைரஸால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு...

கொரோனா டெல்டா பிளஸ் வைரஸால் இந்தியாவில்  ஏற்பட்ட முதல் உயிரிழப்பு...

டெல்டா ப்ளஸ் மரபணு மாற்ற கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

தமிழ்நாடு, மகாராஷ்ரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் சுமார் 40 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

 

மத்திய பிரதேசத்தில் மட்டும் 5 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் போபாலை சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் உஜ்ஜயினியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த உஜ்ஜயினியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் நேற்று உயிரிழந்ததாகவும், டெல்டா பிளஸ் மரபணு மாற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் மரணம் இது என்றும்  இந்தியாவின் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

views

218 Views

Comments

arrow-up