ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்காவிட்டால் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்திற்கு அபராதம்...
Latest_News
calendar
JUN
19

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்காவிட்டால் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்திற்கு அபராதம்...

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்காவிட்டால் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்திற்கு அபராதம்...

எதிர்வரும் செப்டம்பர் 27ம் திகதிக்குள் 80.2 மில்லியன் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க பெல்ஜிய நீதிமன்றம் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 

அது ஜூன் இறுதிக்குள் 120 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மீறியதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் தாக்கல் செய்த  வழக்கு விசாரணையின் போதாகும்.

 

செப்டம்பர்  27ம் திகதிக்குள் தேவையான தடுப்பூசிகளை வழங்கத் தவறினால் அபராதம் செலுத்த அஸ்ட்ராசெனெகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, ஒரு தடுப்பூசிக்கு செலுத்த வேண்டிய அபராதம் 12 அமெரிக்க டொலர்களாகும்.

 

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட அஸ்ட்ராசெனெகா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 70 மில்லியனுக்கும் அதிகமான ஊசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இந்த மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

அஸ்ட்ராசெனெகாவின் முதல் கட்ட தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி பற்றாக்குறையால் தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

source:newsfirst

views

63 Views

Comments

subscribe
arrow-up