ஹட்டன் பஸ் விபத்தின் CCTV பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் வௌிக்கொணர்வு

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் விபத்திற்குள்ளான பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த CCTV பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்த பின்னர் தரவுக்கட்டமைப்பை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் சாரதி கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தியவாறு பஸ்ஸை செலுத்தியுள்ளமை இதுவரையான விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பஸ் நடத்துநரின் கையடக்கத்தொலைபேசியை சாரதி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
75 Views
Comments