நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
20

நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கும்

நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கும்

நாளை (21) அதிகாலை 4.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் புகையிரத சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாகாண போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த சேவைகளை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம  தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அமைச்சர்  பொதுமக்களைக்  கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை (21) முதல் மாகாணங்களில் குறைந்த எண்ணிக்கையிலான புகையிரத பயணங்கள் செயல்படுத்தப்படும் என்று புகையிரத கண்காணிப்பாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என்றும்  அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சிறு நிவாரணம்  திட்டங்கள்  வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

source:newsfirst

views

162 Views

Comments

arrow-up