அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரின் சிறப்பம்சங்கள் இங்கே...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
07

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரின் சிறப்பம்சங்கள் இங்கே...

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரின் சிறப்பம்சங்கள் இங்கே...

அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு சிறப்பு ஸ்டிக்கர்  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், டி.ஐ.ஜி அஜித் ரோஹன, பயணக் கட்டுப்பாடுகள்   விதிக்கப்பட்ட முழு காலத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் இந்த சிறப்பு ஸ்டிக்கர்  அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

 அவர் இது குறித்து விளக்கம் தெரிவிக்கையில், 

 

  • புதிய முறையின் கீழ் 11 வகையான ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்துகிறது.

 

  • தொடர்புடைய ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு முன் வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணக்கு எடுக்கப்படும்.

 

  • பயணிகளின் எண்ணிக்கைக்கான ஸ்டிக்கரை ஒட்டிய பின் அவ்வாகனத்தில் அதற்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியாது.

 

  • விசேட போக்குவரத்து சேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு அதுகுறித்த குறிப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஸ்டிக்கர் வழங்கப்படும்.

 

  • வாகனத்தில் பயணிக்கும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை, சேவை அடையாள அட்டை மற்றும் நிறுவனம் வழங்கிய கடிதத்தை சரிபார்த்த பிறகு ஸ்டிக்கர் வழங்கப்படும்.

 

அத்தியாவசிய சேவைகளுக்கு வருபவர்களுக்கு ஏற்படும் தாமதங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், இது நாளை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதால், காலையில் கொழும்புக்குள் நுழையும் பகுதிகளில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தியாவசிய சேவைகளுக்காக ஸ்டிக்கரை ஒட்டிய பின் வாகனங்கள் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அல்லது பிற அடையாள அட்டைகள் உள்ளவர்கள் அவற்றில் பயணம் செய்தால், அத்தகைய வாகனங்கள் போலீஸ் காவலில் எடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Special Staicker Details

 

views

192 Views

Comments

arrow-up