இழக்க இருந்த உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
02

இழக்க இருந்த உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்

இழக்க இருந்த உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்

"அடுத்த நோயாளி வாங்க."

வெயிலில் கனரக வேலை செய்யும் தொழிலாளி எனக் கருதக்கூடிய மெலிந்த நடுத்தர வயது நபர் ஒருவருடன் அவருடைய மனைவியும் டீனேஜ் வயது மகளும் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

 

“யார் நோய்வாய்ப்பட்டவர்?”

"இவர் தான் டாக்டர்" என நோயாளியை என்னெதிரே கதிரையில் அமர்த்தியபடி அவரது மனைவி கூறினார்.

 

“சரி, என்ன பிரச்சனை?”

"இன்றும் நான் கட்டாயப்படுத்தி கூறியதால் தான் வந்தார். இங்கே வந்தும் கூட முடியாது என்று கூறினார். கட்டாயப்படுத்தி தான் கூட்டி வந்தேன்" என நோயாளியின் மனைவி தொடர்கிறார்.

"டாக்டர், நான் வழக்கமாக குறித்த மருத்துவர் ஒருவரிடம் மட்டுமே மருந்து எடுத்துக்கொள்கிறேன். அந்த மருத்துவர்  சிறிது காலமாக இல்லாததால் இதை வேறொரு மருத்துவரிடம் இருந்து எடுத்துக்கொண்டேன்." என நோயாளியின் கையிலிருந்த மருந்தினை மேசையின் மேல் வைத்தார்.

 

“ஓ அப்படியா… இது என்ன  மருந்து என்று நான் பார்க்கிறேன்” என்று நான் மருந்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது 

"டாக்டர், நான் நீண்ட காலமாக உணவு அருந்துவதில் சிரமப்படுகிறேன். என் தொண்டை வலிக்கிறது. எரிகிறது. விழுங்குவது கொஞ்சம் கடினமாக உள்ளது. என் வயிறு வலிக்கிறது." என்றார். 

 

“வயிறு எரிகிறது போல் உள்ளதா?”

"ஆம் டாக்டர்"

 

“ஆ, அதற்காகத்தான் இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.”

இதற்கிடையில், நோயாளியின் கழுத்தில் கழுத்தில்  அசாதாரணமாக சிவந்து ஒரு சிறிய வீக்கத்தை கண்டேன்.

 

“இவ்வாறு சிவந்து இருப்பது உங்களுக்கு வெகு காலமாக இருந்து  காணப்படுகிறதா?”

"ஆம் டாக்டர். இப்போது 6-7 மாதங்கள் ஆகிவிட்டன."

 

“இதை யாரிடமும் காட்டவில்லையா?”

"இல்லை டாக்டர். நான் அவ்வளவு பொருட்படுத்தவில்லை"

 

“சரி, நான் உங்கள் கழுத்தை கொஞ்சம் பரிசீலித்து பார்க்கிறேன்..”

கழுத்தை பரிசோதித்த பிறகு,

 

“ஹ்ம்ம், உங்களுக்கு இங்கே (கழுத்தின் வலது பக்கத்தின் கீழாக) ஒரு சிறிய கட்டி உள்ளது . நாம்  இதை ஸ்கேன்  செய்து பார்ப்போம். பயப்பட ஒன்றுமில்லை. நான் தற்போதைக்கு வலியைக் குறைக்க உங்களுக்கு கொஞ்சம் மருந்து தருகிறேன்.  எனக்கு இந்த ஸ்கேனை செய்த பின் நிச்சயமாக கொண்டு வந்து காட்டுங்கள். சரியா?”

 

"சரி டாக்டர்"

 

ஸ்கேன் செய்ய தேவைப்படும் ஒரு கடிதத்தை Consultant radiologist ஒருவரை பார்க்கும்படி கொடுத்தேன். ஸ்கேன் செய்யச் சொன்னபோது  நோயாளியின் மனைவியும் மகளும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தனர்.நோயாளியை வெளியே  செல்ல விட்டு அந்த பெண் மீண்டும் வந்து என்னை அழைத்தார்.

 

"டாக்டர், இது ஒரு பெரிய பிரச்சனையா? மகளின் திருமணமும் மே மாதத்தில்தான் இருக்கிறது. டாக்டர் இவர் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மருந்து எடுக்க அழைத்தாலும் வருவதில்லை. தினமும் குடிப்பார். குடிப்பதன் காரணமாக இந்த கட்டி வந்துள்ளது?”

 

“ஹ்ம்ம், பயப்பட ஒன்றுமில்லை. நீங்கள் திருமண வேலைகளை தொடருங்கள். அத்துடன் நான் கூறியது போல் விரைவாக Consutant ஒருவரை சந்தித்து ஸ்கேனை கொண்டு வந்து காட்டுங்கள்”  எனக்கூறி இருவரையும் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு,

 

சகோதரர் நிஷாந்த, "தம்பி,  உங்களுடைய patient  ஒருவர் என்னிடம் வந்தார். அவருடைய ரிப்போர்ட்டுகளை பார்த்த பிறகு, நான் அவரை ஒரு FNAC (கட்டியின் சவ்வு சோதனை) க்கு Surgeon ஒருவரிடம் அனுப்பி வைத்தேன். அவர் நோயாளியை பார்ப்பார். பெரும்பாலும் புற்றுநோயாக இருக்கலாம்”

 

“ஆம் அண்ணா, நானும் சந்தேகித்தேன். பார்ப்போம் என்ன நடக்குமென்று.. எப்படியும் patient மீண்டும் வருவார் தானே..”

சுமார் ஒரு வாரம் கழித்து நான் நோயாளியை பற்றி தேடிப்பார்த்தேன், ஆனால் எந்த செய்தியும் இல்லை. நோயாளி மகரகமவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று சகோதரர் நிஷாந்த கூறினார். எப்படியோ சில மாதங்கள் கழித்து ஒரு நாள் சஹன்

 

"அண்ணா, ஒரு பெண் கடந்த மூன்று நாட்களாக உங்களைத் தேடி வந்தார். நீங்கள் இல்லை  என்றதும் அவர்  எதுவும் கூறாமல் சென்று விட்டார். எப்படியோ  அவர் இன்றும் வந்தார். இன்று நான் அவரை நிறுத்தி விவரங்களைக் கேட்டேன்."

 

“யாரது?  என்ன  சொன்னார்?”

 

"நீங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு புற்று நோயாளி ஒருவருக்கு பரிந்துரை கொடுத்தீர்களா?"

 

“ஹ்ம்ம், ஆம், ஆம். என்ன ஆச்சு அவருக்கு?”

 

"அவரது மனைவி வந்தார். அவருக்கு புற்றுநோய். புற்றுநோய் இருக்கும் இடம் காரணமாக அதை அகற்ற முடியாது என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது. உங்கள் பரிந்துரை காரணமாகத்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவர் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அவர் இன்னும் Radiotherapy செய்வதாகக் கூறினார்.உங்களுக்கு நன்றியை தெரிவிக்க தேடியுள்ளார். உங்களை அன்று சந்திக்காமல் போயிருந்தால் இன்னும் கூட தெரியாமல் இருந்திருக்கும் என்றும் பிறகு சந்தித்துப் பேசுவதற்கு வருவதாகவும் கூறினார்.”

 

“ஓ அப்படியா?”

 

நோயை கண்டுபிடித்த மகிழ்ச்சியை விட இந்த மக்கள் நோய்வாய்ப்படும் போது தங்களைப் பற்றி ஏன் அதிகம் கவனிப்பதில்லை என்பதுதான் எனக்கு வேதனை அளித்தது.










 

~ எஸ்.எஸ். (உண்மைச் சம்பவம்)

views

219 Views

Comments

arrow-up