இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஐவருக்கு 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்து
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
02

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஐவருக்கு 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்து

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ஐவருக்கு 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்து

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி J.M. சுவாமிநாதன், D.M. சுவாமிநாதன், G.G. அருள்பிரகாசம், H.R.A.D.P.குணதிலக மற்றும் S.N.M.குணவர்தன உள்ளிட்டோருக்கே சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தொழிலில் சிறந்து விளங்குகின்றமை, உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

views

11 Views

Comments

arrow-up