சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
04

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 

இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிறு குற்றங்களுக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சமூகத்தில் பெரும் குற்றவாளிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

அவ்வாறான நிலைமையை மாற்றி, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களை சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து, ஆவணம் ஒன்றை தயாரித்து அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஸ தெரிவித்தார். 

views

10 Views

Comments

arrow-up