விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு விசாரணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
03

விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு விசாரணை

விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு விசாரணை

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இடைக்கால தடை விதிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

அத்துடன், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பாகவும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N.சமரகோன் உத்தரவிட்டார். 

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டார்.

 

அதற்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் சிலரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியில் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது. 

views

9 Views

Comments

arrow-up