மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை: இன்றைய விற்பனை நிலவரம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
03

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை: இன்றைய விற்பனை நிலவரம்

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை: இன்றைய விற்பனை நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

 

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்றையதினம்(3) சடுதியாக விலை குறைவடைந்துள்ளது.

 

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 684,150 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams)21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

views

13 Views

Comments

arrow-up